தமிழ்நாடு

கமல்ஹாசனுக்கு ஊழலை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை

Published On 2024-02-05 06:07 GMT   |   Update On 2024-02-05 06:07 GMT
  • நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சி குறித்து தற்போது விவாதிக்க வேண்டிய தேவை இல்லை.
  • விஜய் அரசியல் மூலமாக மக்கள் சேவை செய்ய வேண்டும் எனறு விரும்புகிறார்.

கோவை:

பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலையொட்டி எந்தெந்த மாதிரியான செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பது பற்றி பாராளுமன்ற பொறுப்பாளர்களுக்கும், அமைப்பாளர்களுக்கும் குறிப்புகள் அளிக்கப்பட்டது.

தமிழகத்தை பொறுத்த வரை முதல் அல்லது இரண்டாம் கட்டத்தில் தேர்தல் நடக்கும். ஏப்ரல் மூன்றாவது வாரத்திற்குள் தமிழகத்தில் தேர்தல் முடிவடைய வாய்ப்புகள் உள்ளது.


அரசியலுக்கு திசை கொடுத்த ஒரு அரசியல்வாதி என்று சொன்னால் அவர் அத்வானி தான். அவர் பா.ஜ.க.வை இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியதில் மகத்தான பங்கு வகித்தவர்.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சி குறித்து தற்போது விவாதிக்க வேண்டிய தேவை இல்லை. சட்டமன்ற தேர்தலில் அதுகுறித்து விவாதிக்கலாம். விஜய் அரசியல் மூலமாக மக்கள் சேவை செய்ய வேண்டும் எனறு விரும்புகிறார். அதனை வரவேற்கிறேன்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கட்சி தொடங்கிய போது ஊழலுக்கு எதிராக கட்சி தொடங்குவதாக தெரிவித்தார். அப்போது அவர் பேசியதெல்லாம் வெறும் வெற்று வார்த்தைகள். மேலும் கமல்ஹாசனுக்கு ஊழலை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கமல்ஹாசன் ஊழலுக்கு எதிரானவர் இல்லை. ஊழலுக்கு துணை போகக் கூடியவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News