தமிழ்நாடு

வார இறுதியில் அதிர்ச்சி அளித்த தங்கம் விலை

Published On 2024-03-09 04:27 GMT   |   Update On 2024-03-09 04:27 GMT
  • கிராமுக்கு 20 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.20-க்கும் பார் வெள்ளி ரூ.79,200-க்கும் விற்பனையாகிறது.
  • கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

சென்னை :

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இம்மாதம் தொடக்கத்தில் இருந்தே ஏறுமுகமாக இருந்து வருகிறது. 5-ந்தேதி சவரனுக்கு ரூ.680-ம், 6-ந்தேதி ரூ.200-ம், 7-ந்தேதி ரூ.400-ம், நேற்று ரூ.120-ம் உயர்ந்தது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,200-க்கும் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.20-க்கும் பார் வெள்ளி ரூ.79,200-க்கும் விற்பனையாகிறது.

Tags:    

Similar News