சி.ஏ.ஏ. சட்டத்தில் உள்ள தவறு, குளறுபடி என்ன? - மு.க.ஸ்டாலின் விளக்குவாரா?
- யுத்த காலத்தில் தமிழகம் வந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது.
- சிஏஏ சட்டம் யாருக்கும் எதிரானது கிடையாது.
சென்னை :
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* சிஏஏ சட்டம் பற்றி தெரியாமல் பல்வேறு அரசியல் கட்சியினர் பேசி வருகின்றனர்.
* சிங்கள தமிழர்கள் 11 ஆண்டுகள் இங்கு தங்கி இருந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
* யுத்த காலத்தில் தமிழகம் வந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது.
* மக்களை குழப்பி, திசை திருப்பும் வகையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன.
* குடியுரிமை வழங்குவதற்கான அதிகாரம் மத்திய அரசிற்கு மட்டுமே உள்ளது.
* 2019-ம் ஆண்டுக்கு பிறகு 1,414 பேருக்கு குடியுரிமை வழங்கியுள்ளோம்.
* அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் 31 மாவட்டங்களில் சிஏஏ அமல்படுத்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
* சிஏஏ சட்டம் யாருக்கும் எதிரானது கிடையாது.
* இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உள்பட யாருடைய குடியுரிமையையும் பறிக்க முடியாது.
* 4 லட்சத்து 5 ஆயிரம் பேர் அகதிகளாக இந்தியாவில் உள்ளனர்.
* சட்டத்தில் என்ன தவறு, குளறுபடி உள்ளது என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
* சமத்துவ மக்கள் கட்சியை கூட்டாக பா.ஜ.க.வில் இணைத்துள்ளார், மோடி குடும்பம் பெரிதாகி உள்ளது.
* இலங்கையில் இருந்து வந்த அனைத்து அகதிகளுக்கும் சட்டத்திற்குட்பட்டு குடியுரிமை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.