பாராளுமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டி?
- 3-வது முறையாக வெற்றி பெற்று பிரதமராக வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார்.
- பிரதமர் தலைமையிலான பா.ஜனதாவின் மத்திய தேர்தல் கமிட்டி நேற்று முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தியது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
3-வது முறையாக வெற்றி பெற்று பிரதமராக வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார். அதற்கு வலுசேர்க்கும் வகையில் 370 இடங்களை பிடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறது பா.ஜனதா.
பிரதமர் தலைமையிலான பா.ஜனதாவின் மத்திய தேர்தல் கமிட்டி நேற்று முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனை கூட்டம் அதிகாலை வரை நீடித்துள்ளது. இரவு 10.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் அல்லது கோவை தொகுதியில் அவர் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. நேற்று நடந்த மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் இது குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.