தமிழ்நாடு

பாஜகவும், மோடியும் வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு- மு.க.ஸ்டாலின்

Published On 2024-04-15 14:34 GMT   |   Update On 2024-04-15 14:34 GMT
  • இந்தியாவில் ஜனநாயகமா ? சர்வாதிகாரமா ? என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது.
  • இந்தியாவில் விடியல் ஏற்படுத்த தான், இந்தியா கட்டணியை அமைத்துள்ளோம்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை மஞ்சம்பாக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

வடசென்னை, திருவள்ளூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து, வாக்கு சேகரித்தார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

கலாநிதி வீராசாமியின் குரல், தொடர்ந்து பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். இந்த தேர்தல் சற்று மாறுபட்ட தேர்தல், மிக மிக முக்கியமான தேர்தல்.

இந்தியாவில் ஜனநாயகமா ? சர்வாதிகாரமா ? என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், பல நாட்கள் மக்கள் ஏடிஎம் வாசலில் நின்றனர். பாஜகவும், மோடியும் வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு.

மக்களின் பிரச்சினைகளை முழுதாக அறிந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.

பாஜக கொண்டு வந்த ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம் கொண்டு வரப்படும். சென்னையில் 3வது ரெயில் முனையம் கொண்டு வரப்படும்.

வட மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள், விம்கோ நகரில் நின்று செல்ல நடவடிக்கை.

பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும். மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். தேசிய மீனவர் நல ஆணையம் அமைக்கப்படும்.

இந்தியாவில் விடியல் ஏற்படுத்த தான், இந்தியா கட்டணியை அமைத்துள்ளோம்.

பாஜக தேர்தல் அறிக்கை, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வில்லன்.

மத அடிப்படையில் நாட்டு மக்களை பிளவுபடுத்த பொது சிவில் சட்டத்தை கொண்டு வருகின்றனர்.

சானிட்டரி நாப்கினுக்கு ஜிஎஸ்டி வரி போட்டது தான் பாஜக அரசு. ரூ.1க்கு சானிட்டரி நாப்கின் என 2019ல் சொன்னதை மீண்டும் காப்பி பேஸ்ட் செய்துள்ளனர்.

சானிட்டரி நாப்கினுக்கு ஜிஎஸ்டி வரி போட்டது தான் பாஜக அரசு. செய்த சாதனைகள் என சொல்ல பாஜகவிடம் எதுவும் இல்லை.

சாதி, மதம் என மக்களவை பிளவுப்படுத்தி பிரதமர் மோடி பேசுகிறார். மற்றவர்கள் உண்ணும் உணவை பிரதமர் மோடி விமர்சிக்கிறார். உணவு என்பது தனி மனிதரின் விருப்பம்.

அடுத்தவர் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பிரதமர் மோடி முடிவு செய்ய முடியாது.

தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்பு திட்டத்தையாவது பிரதமர் மோடி செய்தாரா ? வெள்ள பாதிப்புக்கு கூட மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை.

வெள்ள பாதிப்புக்கு கூட மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ.10 லட்சம் கோடி கொடுத்ததாக பச்சை பொய் சொல்கிறார்கள்.

சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் மெதுவாக நடப்பதற்கு மத்திய அரசு நிதி கொடுக்காததே காரணம். எத்தனை பொய்களை தான் காதுகள் தாங்கும்? எங்கள் காதுகள் பாவம் இல்லையா ?

தமிழ்நாட்டிற்கு சிறப்பு திட்டங்களை கொடுக்கும் பிரதமர் தான் நமக்கு வேண்டும். மக்களுக்காக பார்த்து பார்த்து பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

செல்ஃபி எடுக்க கூட ஜிஎஸ்டி போட்டாலும் போடுவார்கள். ஜிஎஸ்டி வரியில் 3 சதவீதம் மட்டுமே பணக்காரர்களிடம் இருந்து வசூல் செய்யப்படுகிறது.

சிஏஏ சட்டத்தை ஆதரித்து பாராளுமன்றத்தில் அதிமுக வாக்களித்தது. மோடியின் நண்பர்களுக்கு தான் ஜிஎஸ்டி வரியான் பயன்.

விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியவர் எடப்பாடி பழனிசாமி. எம்ஜிஆருக்கு பாஜக காவி சாயம் பூசுவதையே கண்டு கொள்ளாமல் இருந்தவர் எடப்பாடி பழனிசாமி.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News