தமிழ்நாடு செய்திகள்

'இது அம்மா கணக்கு': தாயும் மகனும் 10-ம் வகுப்பில் ஒன்றாக படித்து தேர்ச்சி

Published On 2024-05-11 15:07 IST   |   Update On 2024-05-11 16:23:00 IST
  • 9-வது வகுப்புடன் நித்யா பள்ளிப் படிப்பை கைவிட்டுள்ளார்
  • நித்யா, காலை சிற்றுண்டி சமையலராக தற்காலிக பணியில் இருந்துகொண்டே படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கோவிலூர் கிராமத்தில் தாயும் மகனும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற சுவாரஸ்ய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

9-வது வகுப்புடன் நித்யா பள்ளிப் படிப்பை கைவிட்டுள்ளார். தற்போது கல்வி கற்கும் ஆசை வரவே, கோவிலூர் அரசுப் பள்ளியில் படிக்கும் அவரது மகன் சந்தோஷ் உடன் இணைந்து தனியார் பயிற்சி மையத்தில் படித்து தனித்தேர்வராக 10ம் வகுப்பு தேர்வை எழுதி வெற்றி பெற்றுள்ளார்.

நித்யா, கோவிலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி சமையலராக தற்காலிக பணியில் இருந்துகொண்டே படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

அமலா பால் நடிப்பில் வெளியான அம்மா கணக்கு என்ற திரைப்படத்தில் அம்மாவும் மகளும் சேர்ந்து 10 வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவதாக கதை அமைக்கப்பட்டிருக்கும். அந்த திரைப்படத்தில் நடந்தது போலவே தற்போது திருவண்ணாமலையில் தாயும் மகனும் 10 வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

Tags:    

Similar News