தமிழ்நாடு

விபத்தில் வேனின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்துள்ள காட்சி.

பஸ் மீது வேன் மோதி 23 ஐயப்ப பக்தர்கள் காயம்

Published On 2023-12-25 05:36 GMT   |   Update On 2023-12-25 05:36 GMT
  • ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு சென்ற பஸ் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
  • அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திண்டுக்கல்:

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிரபாக்கம் அருகே அம்மணம்பாக்கத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் குழுவினர் ஒரு வேனில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நேற்றிரவு புறப்பட்டனர். இன்று காலை 3 மணியளவில் திண்டுக்கல் பைபாஸ் சாலை மீனாட்சிநாயக்கன்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு சென்ற பஸ் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் வேனின் முன்பகுதி முழுவதும் உடைந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் அம்மணம்பாக்கத்தை சேர்ந்த திருவேங்கடம்(36), அவரது மகள் ஹரிணி(8), ஜெகதாம்பாள்(50), விநாயகம் (40), கோவிந்தராஜ்(27), ஹரிகரன்(16), சுதர்சன்(17), சுகுமாறன்(37). சங்கரலிங்கம்(31) உள்பட 23 அய்யப்ப பக்தர்கள் படுயாமடைந்தனர்.

அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குபதிவு செய்து வேன் டிரைவர் ராம்கியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News