தமிழ்நாடு செய்திகள்
திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான மேம்பால பணி - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்
- திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை நான்கு வழித்தட சாலை மேம்பாலம் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் மூலம் அமைக்கப்படும்.
- ரூ.2100 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2025–2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கையாளும் விதமாக சென்னை நகரின் கிழக்கு கடற்கரைச் சாலையில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை நான்கு வழித்தட சாலை மேம்பாலம் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TANSHA) மூலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், திருவான்மியூர்-உத்தண்டி வரையிலான சாலை மேம்பால பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் மூலம் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை, சுமார் 13.30 கி.மீ. நீளத்திற்கு ரூ.2100 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.