தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் சிலிண்டர் வெடித்து விபத்து: நகைப்பட்டறை உரிமையாளர் உயிரிழப்பு

Published On 2026-02-26 10:01 IST   |   Update On 2026-02-26 10:01:00 IST
  • சுமன் பால் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
  • 6 பேருக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை சவுகார்பேட்டையில் சாய் வாக்ஸ் என்ற நகைப்பட்டறையில் சிலிண்டர் கேஸ் கசிவு ஏற்பட்டு வெடித்து விபத்துக்குள்ளானது.

இதில், படுகாயமடைந்த நகைப்பட்டறை உரிமையாளர் சுமன் பால் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், நகைப்பட்டறை ஊழியர்கள் அரவிந்த், சூரஜ், ஆனந்த், இந்திரஜித் உள்ளிட்ட 6 பேருக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News