GOLD PRICE TODAY : சற்றே குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி 295 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் அதிர்ச்சி அளித்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 1,440 ரூபாய், செவ்வாய்கிழமை 240 ரூபாய், நேற்று சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,440-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,920-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,360-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 295 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
25-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,440
24-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,120
23-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,880
22-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440
21-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
25-02-2026- ஒரு கிராம் ரூ.295
24-02-2026- ஒரு கிராம் ரூ.290
23-02-2026- ஒரு கிராம் ரூ.300
22-02-2026- ஒரு கிராம் ரூ.290
21-02-2026- ஒரு கிராம் ரூ.290