செய்திகள்

பாரதீய ஜனதாவுக்கு வாக்களிக்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள்- பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

Published On 2019-04-08 10:58 GMT   |   Update On 2019-04-08 10:58 GMT
தாமரைக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டார்கள். இதனால் எனது வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று பொன் ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். #ponradhakrishnan #bjp

நாகர்கோவில்:

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். புதூர், கருமன்கூடல், சரல், செம்பன்விளை, இரும்பிளி பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். சென்ற இடங்களில் எல்லாம் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நான் ஏற்கனவே எனது சம்பளத்தை மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்காக செலவு செய்து வருகிறேன். இந்த தேர்தலில் எனக்கு போட்டியாக யாரும் இல்லை. மக்கள் முடிவு செய்து விட்டார்கள். பாரதீய ஜனதா தான் வெற்றி பெற வேண்டும். பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அவர் தான் நமது வேலைக்காரன். அவர் பல்வேறு திட்டங்களை நமது மாவட்டத்திற்காக செயல்படுத்தி உள்ளார். 40 ஆயிரம் கோடி செலவில் திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். எனவே தாமரைக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டார்கள். இதனால் எனது வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.

60 ஆண்டு கனவு திட்டமான துறைமுக திட்டத்தை செயல் படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறேன். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் அந்த திட்டத்தை செயல்படுத்த விடமாட்டேன். தடுத்து நிறுத்துவேன் என கூறி வருகிறார். கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய காங்கிரஸ் வேட்பாளர் இங்கிருந்து நாங்குநேரிக்கு சென்று விட்டார். மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் தான் இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டிருக்கிறார்.

பொதுமக்கள் சிந்தித்து பார்த்து தங்களது வாக்குகளை சிதறாமல் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். 

இவ்வாறு அவர் பேசினார். 

மாவட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர். #ponradhakrishnan #bjp

Tags:    

Similar News