செய்திகள்

பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு போடுவதா?- வைகோ கண்டனம்

Published On 2018-11-07 11:57 GMT   |   Update On 2018-11-07 11:57 GMT
உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தீபாவளி நாளில் பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko
ஈரோடு:

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று ஈரோட்டுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

பட்டாசு வெடிக்க இரண்டு மணிநேரம் மட்டும் என்று நேரம் கொடுத்துள்ளனர். அதாவது நாம் காலம் காலமாக வந்து நாள் முழுக்க காலை முதல் மாலை வரை பட்டாசு வெடித்து வருகிறோம். சிறுவர்கள், இளைஞர்கள் ஆர்வம் மிகுதியால் சில இடங்களில் பட்டாசு போட்டிருக்கலாம். அவர்களை எச்சரித்து இதுபோன்று செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டு விட்டு இருக்கலாம்.

அதை விட்டுவிட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்வது தவறானது. 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விருப்பமில்லாமலேயே இருக்கிறார். ஏற்கனவே நீதிமன்றம் விடுதலை செய்யலாம் என்று பச்சைக் கொடி காட்டி விட்டது.

அதுபோன்ற தமிழ்நாடு அமைச்சர் அவையும் தீர்மானம் போட்டு அனுப்பி விட்டது. அரசியல் சட்டத்தின் 161 வது பிரிவின்படி அவர்களை விடுதலை செய்ய வேண்டியது ஆளுநரின் மனிதாபிமான கடமையாகும். அவர்கள் கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் தங்கள் வாழ்க்கையை சிறையில் கழித்து விட்டனர்.

அதனால் ஆளுநர் மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யலாம். ஆனால் ஆளுநர் உச்சநீதிமன்றத்தில் இன்னொரு தரப்பினர் வழக்கு போட்டு உள்ளனர் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அவர்கள் அணையை உடைக்க வேண்டும் எண்ணத்திலேயே செயல்பட்டு வருகின்றன. இரண்டு கமிட்டிகள் ஆய்வு செய்து அதை மிக வலுவாக இருக்கிறது என்று சொல்லிவிட்டது.

ஆயிரம் ஆண்டுகளானாலும் பாதிப்பு இல்லை என்றும் கூறி விட்டது. உச்சநீதிமன்றம் அமைத்த நீதிபதி ஆனந்த் தலைமையிலான கமிட்டி குழுவில் கேரளா சார்பில் நீதிபதி தாமஸ் தமிழ்நாடு சார்பில் நீதிபதி லட்சுமணன் அடங்கிய கமிட்டி மிகத் தெளிவான அறிக்கை கொடுத்துள்ளது. இன்னொரு அணை கட்டுவதற்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறிவிட்டது. ஆனாலும் கேரள அரசு வழக்கு போட்டுள்ளது. இந்த விசயத்தில் மத்திய அரசு துரோகம் செய்துள்ளது.

மத்திய அரசு தொடர்ந்து தமிழக பிரச்சனையில் தலையிட்டு வருகிறது. மீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்ற எல்லா பிரச்சனைகளும் அனைத்தும் அரசுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு இப்போது உள்ள சட்டங்களை வைத்து கடுமையான நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு வைகோ கூறினார். #MDMK #Vaiko
Tags:    

Similar News