விளையாட்டு

நான் ஒரு கிறிஸ்தவளாக இருந்தாலும்.. மகா கும்பமேளாவில் புனித நீராடிய மேரி கோம்- வைரல் வீடியோ

Published On 2025-01-28 12:27 IST   |   Update On 2025-01-28 12:27:00 IST
  • மகா கும்பமேளாவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் புனித நீராடினார்.
  • பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் [திரிவேணி சங்கமம்] இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா.

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததைக் குறிக்கும் விதமாகக் கொண்டாடப்படுவது மகா கும்பமேளா. அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 12-ம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை நடைபெறும்.

இந்நிலையில் மகா கும்பமேளாவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்ட மேரி கோம், தண்ணீரில் ஓடி பாக்சிங்கும் செய்துகாண்பித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இது குறித்து அவர் கூறியதாவது:-

இது ஒரு நல்ல அனுபவம். ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் இதை உலகத்தரம் வாய்ந்த யாத்திரையாக மாற்றியுள்ளனர். நான் ஒரு கிறிஸ்தவனாக இருந்தாலும், இந்த நிகழ்விற்கு ஆதரவளிக்க வந்தேன்.

என மேரிகோம் கூறினார்.

Tags:    

Similar News