4 ஆண்டுக்கு முன் சொன்னதை செய்துகாட்டிய மந்தனா, கவுர்: ஜுலான் கோ ஸ்வாமி பெருமிதம்
- இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
- உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுடெல்லி:
இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
உலகக் கோப்பையை வென்றது தொடர்பாக இந்நாள் மற்றும் முன்னாள் வீராங்கனைகள் பலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், உலகக் கோப்பை வென்றது தொடர்பாக தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி கூறியதாவது:
இந்த உலகக் கோப்பைக்கு முன் எனக்காக அதைச் செய்வதாக அவர்கள் எனக்கு உறுதியளித்தார்கள்.
2022-ம் ஆண்டு நாங்கள் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியவில்லை. அதன்பிறகு, ஹர்மனும் ஸ்மிருதியும் நள்ளிரவில் என் அறைக்கு வந்து, 'அடுத்த உலகக் கோப்பையில் நீங்கள் இருப்பீர்களா என எங்களுக்குத் தெரியாது. ஆனால் உங்களுக்காக அந்தக் கோப்பையை நாங்கள் வெல்வோம் என சொன்னார்கள். இறுதியாக, அவர்கள் அதைச் செய்தார்கள், அதனால்தான் நாங்கள் அனைவரும் இப்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளோம் என தெரிவித்தார்.