கிரிக்கெட் (Cricket)

SA எதிரான டி20 தொடர்: இந்திய அணியில் இடம்பெறும் 2 வீரர்கள்- மீண்டும் ஓரம் கட்டப்படும் சாம்சன்?

Published On 2025-12-02 21:44 IST   |   Update On 2025-12-02 21:44:00 IST
  • காயம் காரணமாக சுப்மன் கில் அணியில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனை நீக்கி விட்டு ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ராய்ப்பூரில் நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.

இந்நிலையில் இந்த தொடர் முடிந்தவுடன் இரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் யார் யார் இடம் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதன்படி காயம் காரணமாக சுப்மன் கில் அணியில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஹர்திக் பாண்ட்யா, ரியான் பராக் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் அணியில் இடம் பிடித்தால் சஞ்சு சாம்சனை வழக்கம் போல கழற்றி விட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனை நீக்கி விட்டு ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் அவர் அணியில் இடம் பெறுவதே ஒரு கேள்வி குறியாக உள்ளது.

Tags:    

Similar News