கிரிக்கெட் (Cricket)

ஆண்ட்ரே ரசலை விடுவிக்க ஷாருக்கான் தான் காரணம்- வெளியான அதிர்ச்சி தகவல்

Published On 2025-12-06 11:20 IST   |   Update On 2025-12-06 11:20:00 IST
  • கொல்கத்தா அணிக்காக 12 ஆண்டுகளாக விளையாடிய ஆண்ட்ரே ரசல் விளையாடி வந்தார்.
  • 2026 ஐ.பி.எல். சீசனுக்கான மினி ஏலத்திற்கு முன் ஆண்ட்ரே ரசலை கொல்கத்தா அணி விடுவித்தது.

2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக்கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணிகளும் வெளியிட்டது.

கொல்கத்தா அணிக்காக 12 ஆண்டுகளாக விளையாடிய ஆண்ட்ரே ரசலை அந்த அணி விடுவித்தது பேசுபொருளானது. இதனால் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆண்ட்ரே ரசல் அறிவித்துள்ளார். மேலும் மற்ற ஜெர்சியை போட்டு பார்ப்பதை நினைத்து பார்க்க முடியவில்லை. அதனால் ஓய்வு பெறுவதாக அறிவித்ததாக அவர் கூறினார்.

இதனையடுத்து அவர் 2026 சீசனில் கொல்கத்தா அணியின் POWER COACH ஆக செயல்படவுள்ளதாகவும், உலகின் பல்வேறு தொடர்களில் தொடர்ந்து விளையாடப் போவதாகவும் ரசல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவரை அணியில் இருந்து கழற்றி விட அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஷாருக்கான் ஆலோசனை வழங்கியதாக கொல்கத்தா அணியின் CEO வெங்கி மைசூர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆண்ட்ரே ரசலுக்கு தற்போது 37 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News