கிரிக்கெட் (Cricket)
சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்கள்: மெகா சாதனை பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா
- ரோகித் சர்மா இதுவரை 505 போட்டிகளில் விளையாடி 20,000 ரன்களைக் கடந்துள்ளார்.
- இதுவரை 4 வீரர்கள் மட்டுமே 20,000 சர்வதேச ரன்களைக் கடந்துள்ளனர்.
விசாகப்பட்டினம்:
விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ரோகித் சர்மா தான் விளையாடிய கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் மூன்று அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்து இருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்தும் சேர்த்து) ரோகித் சர்மா இதுவரை 505 போட்டிகளில் விளையாடி 20,000 ரன்களைக் குவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 4 வீரர்கள் மட்டுமே 20,000 சர்வதேச ரன்களைக் கடந்துள்ளனர்.
அந்த பட்டியல்:
சச்சின் டெண்டுல்கர்-34,357 ரன்கள்
விராட் கோலி-27,910 ரன்கள்
ராகுல் டிராவிட்-24,208 ரன்கள்
ரோகித் சர்மா-20000 ரன்கள்