கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை அரையிறுதி; தென்ஆப்பிரிக்கா பவர் பிளேயில் 48/2 #T20 World Cup Semi Final

Published On 2026-03-04 19:38 IST   |   Update On 2026-03-04 19:38:00 IST
  • டி காக் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
  • ரிக்கெல்டன் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து டாஸ் வன்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி தென்ஆப்பிரிக்காவின் மார்க்கிராம், டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஹென்றி வீசினார். இந்த ஓவரில் தென்ஆப்பிரிக்கா 7 ரன்கள் அடித்தது. அடுத்த ஓவரை சுழற்பந்து வீச்சாளர் மெக்கொன்சி வீசினார். இந்த ஓவரில் தென்ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டி காக் 3-வது பந்தில் பெர்குசனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 8 பந்தில் 10 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த ரிக்கெல்டன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 1.5 ஓவரில் 12 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து வந்த பிரேவிஸ் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். தென்ஆப்பிரிக்கா பவர் பிளேயான முதல் 6 ஓவரில 2 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் அடித்துள்ளது.

Tags:    

Similar News