அரையிறுதியில் நன்றாக விளையாடனும்: விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அபிஷேக், இஷான், அக்சர் #T20 World Cup Semi final
- மும்பை வான்கடேயில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான அரையிறுதி போட்டி நாளை நடக்கிறது.
- அபிஷேக் சர்மா இந்த தொடரில் மிகப்பெரிய அளவில் விளையாடவில்லை.
டி20 உலகக் கோப்பையில் முதல் அரையிறுதி போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கிறது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், அக்சர் படேல் ஸ்ரீ சித்திவிநாயகர் கணபதி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
சூப்பர் 8 சுற்றில் இந்தியா குரூப் 1-ல் 2-வது இடம் பிடித்தது. இங்கிலாந்து குரூப் 2-ல் முதல் இடம் பிடித்தது. இந்தியா குரூப் 1-ல் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. இங்கிலாந்து 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
இந்த மூன்று பேரும் டி20 உலகக் கோப்பையில் மிகப்பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் கடவுள் ஆசீர்வாதத்திற்காக கோவில் சென்றுள்ளனர்.