கிரிக்கெட் (Cricket)

தோனிக்கு அடுத்தபடியாக முதல் விக்கெட் கீப்பர் கேப்டன்: பண்ட் சாதனை

Published On 2025-11-22 13:19 IST   |   Update On 2025-11-22 13:19:00 IST
  • இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
  • இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பண்ட் செயல்படுகிறார்.

கவுகாத்தி:

இந்தியாவுக்கு வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் தோனிக்கு அடுத்தபடியாக இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

2008 -2014 ஆண்டுகளில் 60 டெஸ்ட் போட்டிகளுக்கு தோனி கேப்டனாக இருந்துள்ளார். 2022-ல் கே.எல்.ராகுல் 3 போட்டிகளை வழிநடத்தினாலும், அவற்றிலும் ரிஷப் பண்ட், கீப்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News