2-வது டி20 போட்டியிலும் வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் அணியை சம்பவம் செய்த நேபாளம்
- முதலில் பேட்டிங் செய்த நேபாளம் அணி 173 ரன்கள் குவித்தது.
- இதனையடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 83 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சார்ஜா:
வெஸ்ட் இண்டீஸ், நேபாளம் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சார்ஜாவில் நடக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் நேபாளம் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் முழு உறுப்பினர் அணிக்கு எதிராக முதல் வெற்றியை நேபாளம் பதிவு செய்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நேபாளம் அணி 20 ஓவரில் 173 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆசிஃப் ஷேக் 68 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணியில் 3 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 17.1 ஓவரில் 83 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் நேபாளம் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நேபாளம் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.