Haters தான் இதை AI என்று சொல்லுவார்கள்- LSG வெளியிட்ட புகைப்படம் வைரல்
- ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட், ருதுராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- விராட் கோலி, ரிஷப் பண்ட், ருதுராஜ் ஆகியோருக்கு எம்எஸ் தோனி தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிந்தது. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றி சாதனை படைத்தது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 30-ந் தேதி ராஞ்சியில் தொடங்குகிறது. இதற்காக ராஞ்சி வந்த இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற விராட் கோலி, ரிஷப் பண்ட், ருதுராஜ் ஆகியோருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே வீரருமான எம் எஸ் தோனி தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார்.
அதற்காக 3 பேரும் நேற்று இரவு தோனி வீட்டுக்கு சென்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
3 பேரும் தோனி வீட்டிற்குள் சென்றது மற்றும் வெளி வந்த புகைப்படம் மற்றும் வீடியோ மட்டுமே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வீட்டிற்குள் என்ன நடந்தது என்பது குறித்தும் அவர்கள் விருந்தில் என்ன சாப்பிட்டார்கள் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார்களா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தோனி, கோலி, ரிஷப் பண்ட் ஆகிய 3 பேரும் சாப்பிடுவது போன்ற AI புகைப்படத்தை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சமூக வலைதளங்களில் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்திற்கு வெறுப்பவர்கள் மட்டுமே இதை AI என கூறுவார்கள் எனவும் தலைப்பிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.