ஐ.பி.எல்.(IPL)
2010-ல் கோப்பையை வென்றது போல இந்தமுறையும் வெல்வோம்- CSK அணியின் CEO நம்பிக்கை
- விளையாட்டுல வெற்றி, தோல்வி எல்லாருக்கும் இருக்கும்.
- மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்கள்.
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 போட்டிகளில் 6 தோல்விகளைச் சந்தித்துள்ளது. அந்த அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு மிகவும் சிக்கலானதாக உள்ளது.
இந்நிலையில் 2010-ல் இதேபோல தொடர் தோல்விகளை சந்தித்து இறுதியில் கோப்பையை வென்றோம் என சிஎஸ்கே அணியின் CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தோல்விக்கு காரணமே கிடையாது சார். இது Game. விளையாட்டுல வெற்றி, தோல்வி எல்லாருக்கும் இருக்கும். வெற்றி பெறும்போது பாராட்டுறீங்க. தோற்றுவிட்டால் நல்லா பண்ணலனு சொல்றீங்க. சரியா ஆடல என்பது உண்மைதான்.
அதை சரி செய்ய முயற்சி பண்ணிட்டு இருக்கோம். 2010-ல் இதேபோல தொடர் தோல்விகளை சந்தித்து இறுதியில் கோப்பையை வென்றோம். அதனால், மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
என காசிவிஸ்வநாதன் கூறினார்.