மிட்செல் சான்ட்னர் போல பந்து வீசிய போல்ட்- வைரல் வீடியோ
- லீக் போட்டிகளின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
- குஜராத் -மும்பை அணிகள் எலிமினேட்டர் போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை மோதுகிறது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. லீக் போட்டிகளின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப், 2-வது இடம் பிடித்த ஆர்சிபி அணியுடன் குவாலிபையர் 1 சுற்றில் நாளை மோதுகிறது. புள்ளிப்பட்டியலில் 3-ம் இடம் பிடித்த குஜராத், 4 -ம் இடம்பிடித்த மும்பை அணியுடன் எலிமினேட்டர் போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை (மே 30) மோதுகிறது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பயிற்சியின் போது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட், சக வீரரான மிட்செல் சான்ட்னர் மாதிரி சுழற்பந்து வீசினார். அருகில் இருந்த பும்ரா இதனை சிரித்தப்படி பார்த்துக் கொண்டிருந்தார். கிட்ட தட்ட அவரே மாதிரி போல்ட் பந்து வீசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.