ஐ.பி.எல்.(IPL)

பஹல்காம் தாக்குதல்: ஐதராபாத்- மும்பை அணிகள் மோதும் போட்டியில் கட்டுப்பாடுகள் விதித்த பிசிசிஐ

Published On 2025-04-23 15:57 IST   |   Update On 2025-04-23 15:57:00 IST
  • பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலியாகினர்.
  • வீரர்கள், நடுவர்கள் என அனைவரும் கைகளில் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்க உள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நேற்று பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற உள்ள மும்பை - ஐதராபாத் இடையிலான லீக் ஆட்டத்தின் போது பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரர்கள், நடுவர்கள் என அனைவரும் கைகளில் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்க வேண்டும் என பி.சி.சி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த போட்டியின் போது, சியர்லீடர்கள் நடனமாடக்கூடாது எனவும், பட்டாசுகள் வெடிக்கக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News