IPL நிறைவு விழாவில் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சங்கர் மகாதேவன் இசை நிகழ்ச்சி
- பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் இந்திய முப்படையினரின் புகழை பாட உள்ளார்.
- பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி இருக்கும்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
இந்நிலையில், ஐ.பி.எல். இறுதிப்போட் டிக்கு முன்பு மாலை 6 மணிக்கு நிறைவு விழா நடைபெறுகிது.
இதில், பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் இந்திய முப்படையினரின் புகழை பாட உள்ளார். ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் இடம் பெற்றிருந்த ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் விதமாகவும், பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இசை நிகழ்ச்சி இருக்கும் என்று கூறப்படுகிறது.