ஐ.பி.எல்.(IPL)

எனது டி20 பேட்டிங்கின் வளர்ச்சிக்கு இதுதான் உதவியது: சாய் சுதர்சன்

Published On 2025-04-03 16:38 IST   |   Update On 2025-04-03 16:38:00 IST
  • இந்த மூன்று ஆண்டுகளில் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.
  • குஜராத் அணியுடன் வலை பயிற்சியில் நிறைய வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டேன்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பெங்களூரு- குஜராத் அணிகள் மோதின. இதில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் சாய் சுதர்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த தொடரின் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சுதர்சன் 186 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் 62 சராசரி 158 ஸ்ட்ரைக்-ரேட்டும் அந்த ரன்களை எடுத்துள்ளார்.

இந்நிலையில் கடினமான சூழ்நிலைகள் தான் எனது டி20 பேட்டிங் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என குஜராத் அணியின் தொடக்க வீரரும் தமிழக வீரருமான சாய் சுதர்சன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஐபிஎல் தொடரில் இது எனது 4-ம் ஆண்டு. எனவே இது எனக்கு நிறைய அனுபவத்தை அளித்ததாக உணர்கிறேன். சில கடினமான சூழ்நிலைகளை நான் எதிர்கொண்டேன். குஜராத் அணியுடன் வலை பயிற்சியில் நிறைய வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டேன்.

எனது வளர்ச்சிக்கு அல்லது எனது டி20 பேட்டிங்கை மேம்படுத்திய விதத்திற்கு மிக முக்கியமான காரணமாக குஜராத் அணியின் பந்து வீச்சாளர்கள், சர்வதேச பந்து வீச்சாளர்களுடன் நான் இங்கு பெறும் விளையாட்டு நேரமும் பயிற்சி நேரமும் தான் என்று நான் நினைக்கிறேன். எனவே, வலை பயிற்சியில் இருந்து கூட அது எனக்கு உதவியது என்று நான் கூறுவேன்.

இந்த மூன்று ஆண்டுகளில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். இது ஆட்டத்தை நன்றாகப் புரிந்துகொள்ளவும், ஆட்டத்தின் அடிப்படைகளையும் புரிந்துகொள்ளவும் எனக்கு உதவியது என்று நான் நினைக்கிறேன்.

பட்லர் நிறைய அனுபவத்தையும் நிறைய அறிவையும் கொண்டு வருகிறார் என்று நான் நினைக்கிறேன். இது மிடில் ஓவர்களை சரிசெய்யவும், கடைசி ஐந்து ஓவர்களை மிகச் சிறப்பாக விளையாடவும் எங்களுக்கு உதவுகிறது.

என்று சுதர்சன் கூறினார்.

Tags:    

Similar News