ஐ.பி.எல்.(IPL)
null

ஐபிஎல் 2025- 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது சிஎஸ்கே

Published On 2025-04-14 23:30 IST   |   Update On 2025-04-15 22:52:00 IST
  • ஷேக் ரஷீத் 27 ரன்னிலும், ரவீந்திரா 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
  • சிஎஸ்கே அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் பதிரனா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் பதிரனா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி வீரர்கள் ஷேக் ரஷீத் 27 ரன்களும், ரவீந்திரா 37 ரன்களும், திரிபாதி 9 ரன்களும், ஜடேஜா 7 ரன்களும், விஜய் சங்கர் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த துபே மற்றும் தோனி சிறப்பாக ஆடினர்.

துபே 37 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 43 ரன்களும், தோனி 11 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 26 ரன்களும் எடுத்து களத்தில் நின்றனர்.

இறுதியில் சிஎஸ்கே அணி 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதனால் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

Tags:    

Similar News