ஐ.பி.எல்.(IPL)
ஐபிஎல் மினி ஏலம்: கேமரூன் கிரீனை ரூ.25.20 கோடிக்கு வாங்கியது கே.கே.ஆர்.
- 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது.
- இன்று நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.
அபுதாபி:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.
இன்று நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேமரூன் கிரீனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.25.20 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
2025-12-16 09:52 GMT
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை ஏலத்தில் எடுக்க ஆர்சிபி மற்றும் கொல்கத்தா அணிக்கு இடையே கடும் போட்டி நடந்தது. இதில் ஆர்சிபி அணி வெங்கடேஷ் ஐயரை ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்தது.