விலை போகாத அண்ணன்.. சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கானை ஏலத்தில் எடுத்த பஞ்சாப் - லைவ் அப்டேட்ஸ்
- ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது.
- ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நேற்று துவங்கியது. முதல் நாள் ஏலத்தில் பல்வேறு முன்னணி வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். நேற்றைய ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இதேபோல் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்க முடியாத சம்பவங்களும் அரங்கேறின. அந்த வகையில், ஐபிஎல் மெகா ஏலம் இரண்டாவதாக நாளாக இன்றும் நடைபெறுகிறது.
ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வைபவ் சூரியவன்ஷி என்ற 13 வயது வீரரை ரூ.1.10 கோடிக்கு எடுத்துள்ளது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதற்கு பிறகு பிறந்து, அதில் விளையாட தேர்வான முதல் வீரர் என்ற பெருமையை 13 வயதான வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார்
உமங் குமார், திக்விஜய் தேஷ்முக், யாஷ் தபாஸ் UNSOLD
இஷன் மலிங்காவுக்கு ரூ. 1.2 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ்
ரிபல் பட்டேல், அவினாஷ் சிங், சஞ்சய் யாதவ் UNSOLD
வைபவ் சூர்யவான்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 1.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது
பிலெசிங் முசாரபானி, பிரெண்டன் மெக்முல்லன், அதித் ஷேத், விஜய் குமார், ராஸ்டன் சேஸ், நாதன் ஸ்மித், கைல் ஜேமிசன், க்ரிஸ் ஜோர்டன் UNSOLD
சத்யநாராயணா ராஜூவை மும்பை அணி ரூ. 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது.
ராஜ் லிம்பானி, சிவா சிங், அன்ஷூமான் ஹூடா, டுவைன் பிரிடோரியஸ் UNSOLD
ராமகிருஷ்ணா கோஷ்-ஐ ரூ. 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்த சி.எஸ்.கே.
பைலா அவினாஷ்-ஐ ரூ. 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்த பஞ்சாப்