கிரிக்கெட் (Cricket)

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: பும்ரா, பாண்ட்யாவுக்கு ஓய்வு?

Published On 2025-12-29 10:41 IST   |   Update On 2025-12-29 10:41:00 IST
  • பும்ரா ஒருநாள் போட்டியில் விளையாடி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிறது.
  • 32 வயதான ஹர்திக் பாண்ட்யா கடைசியாக மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடினார்.

புதுடெல்லி:

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஜனவரி 11-ந்தேதி ஒருநாள் தொடர் தொடங்குகிறது.

இதில் 20 ஓவர் போட் டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஒருநாள் போட்டிக்கான அணி இந்த வாரம் அறிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வேகப்பந்து வீரர் ஜஸ்பிரீத் பும்ரா, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் 20 ஓவர் அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள். 20 ஓவர் உலக கோப்பையை கருத்தில் கொண்டு இருவரும் ஒருநாள் தொடரில் ஆடமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பு இந்திய அணி கடைசியாக நியூசிலாந்துடன் விளையாடுகிறது. பும்ரா ஒருநாள் போட்டியில் விளையாடி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2023 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆடினார்.

32 வயதான ஹர்திக் பாண்ட்யா கடைசியாக மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடினார். அதன் பிறகு அவர் எந்த ஒருநாள் போட்டியிலும் ஆடவில்லை.

Tags:    

Similar News