அபிஷேக் சர்மா சிறந்த வீரர்: அவருக்கு எதிராக விளையாட விரும்புகிறோம்- பாகிஸ்தான் கேப்டன்
- அபிஷேக் சர்மா நமீபியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை.
- பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலகக் கோப்பையில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நாளை இரவு நடக்கிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் கொழும்பில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா, உடல்நிலை சரியில்லாத காரணத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், டிஸ்சார்ஜ் ஆகி அணியில் இணைந்துள்ளார்.
ஆனால், நாளைய போட்டியில் அவர் விளையாடலாம் எனத் தெரிகிறது. ஆனால், அணி நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக இது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை. அபிஷேக் சர்மா இடம் பெறவில்லை என்றால் சஞ்சு சாம்சன் தொடர்ந்து அணியில் இடம் பிடிப்பார். இவர் நமீபியாவுக்கு எதிராக விளையாடினார்.
இந்த நிலையில் அபிஷேக் சர்மா குறித்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கூறுகையில் "அபிஷேக் சர்மா பெஸ்ட் (Best). மிகவும் எதிர்பார்க்கக் கூடிய இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் அவர் இடம் பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் சிறந்த வீரருக்கு எதிராக விளையாட விரும்புகிறோம்" என்றார்.