கிரிக்கெட் (Cricket)

20 ஓவர் உலக கோப்பை போட்டி- பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கைகுலுக்குவார்களா?

Published On 2026-02-14 12:46 IST   |   Update On 2026-02-14 12:46:00 IST
  • நாளைய ஆட்டத்தின்போது பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கைகுலுக்குவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
  • இந்தியாவுடன் விளையாட முதலில் மறுத்து பின்னர் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.

கிரிக்கெட் போட்டியின்போது டாஸ் நிகழ்வில் இரு அணிகளின் கேப்டன்கள் கை குலுக்கி கொள்வது வழக்கமானது. இதே போல போட்டி முடிந்த பிறகும் வீரர்கள் கைகுலுக்கி கொள்வார்கள்.

பகல்காம் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக பாகிஸ்தான் வீரர்களிடம் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய வீரர்கள் ஆசிய கோப்பை போட்டியின்போது கைகுலுக்க மறுத்துவிட்டனர்.

மேலும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், அந்நாட்டு அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருமான மோஷின் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பையையும் வாங்க சூர்யகுமார் யாதவ் மறுத்துவிட்டார்.

இந்த சர்ச்சை முடிந்த பிறகு இரு அணிகளும் 20 ஓவர் உலக கோப்பைக்காக நாளை மோதுகிறார்கள். இந்தியாவுடன் விளையாட முதலில் மறுத்து பின்னர் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.

நாளைய ஆட்டத்தின்போது பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கைகுலுக்குவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பேச்சு வார்த்தையின்போது ஐ.சி.சி.யிடம் இந்த நிபந்தனையும் பாகிஸ்தான் முன்வைத்ததாக தகவல் வெளியானது. இதை ஐ.சி.சி. நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News