கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை: யுஏஇ அணிக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கனடா

Published On 2026-02-13 16:54 IST   |   Update On 2026-02-13 16:54:00 IST
  • கனடா தரப்பில் ஹர்ஷ் அரை சதம் எடுத்து ஆட்டமிழந்தார்.
  • யுஏஇ தரப்பில் ஜுனைத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்துகின்றன. இதில் இன்று 19-வது லீக் ஆட்டத்தில் யுஏஇ- கனடா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற கனடா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய கனடா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது.

ஹர்ஷ் தாக்கர்- நவ்னீத் தலிவால் ஆகியோர் சிறப்பாக விளையாடிய ரன்களை குவித்தனர். இதில் நவ்னீத் தலிவால் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்ஷ் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் கனடா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்தது. யுஏஇ தரப்பில் ஜுனைத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Tags:    

Similar News