டாம் பான்டன் அரைசதம்: அயர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து
- அயர்லாந்து 152 ரன்கள் சேர்த்திருந்தது.
- இங்கிலாந்து 18.2 ஓவரில் இலக்கை எட்டியது.
டி20 உலகக் கோப்பையில் இன்றைய 2-வது போட்டி கொல்த்தாவில் நடைபெற்றது. இதில் "சி" பிரிவில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து- ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஸ்காட்லாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சே 6 பந்தில் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மைக்கேல் ஜோன்ஸ் 20 பந்தில் 33 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ரிச்சி பெரிங்டன் 32 பந்தில் 49 ரன்கள் விளாசினார். டாம் ப்ரூஸ் 24 ரன்களும், அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஆலிவர் டேவிட்சன் கடைசி வரை நின்று ஆட்டமிழக்காமல் 15 பந்தில் 20 ரன்கள் அடிக்க அயர்லாந்து 19.4 ஓவரில் 152 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் அதில் ரஷித் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆர்சச்ர் மற்றும் டாசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்களான பில் சால்ட் (2), ஜாஸ் பட்லர் (3) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து ஜேக்கப் பெத்தேல் உடன் டாம் பான்டன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. பெத்தேல் 28 பந்தில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கேப்டன் ஹாரி ப்ரூக் 4 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.
இதனால் இங்கிலாந்துக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டது. இருந்தாலும் அடுத்த வந்த சாம் கர்ரன் 20 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் டாம் பான்டன் 33 பந்தில் அரைசதம் விளாசினார்.
ஜேம்ஸ் பான்டன், வில் ஜேக்ஸ் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். 19-வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கும், 2-வது பந்தை பவுண்டரிக்கும் வில் ஜேக்ஸ் விரட்ட இங்கிலாந்து 18.2 ஓவரில் 155 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
டாம் பான்டன் 41 பந்தில் 63 ரன்களுடனும், வில் ஜேக்ஸ் 10 பந்தில் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து சி பிரிவில் 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.