கிரிக்கெட் (Cricket)

சின்னசாமி மைதான கேலரிகளுக்கு அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் பெயர் சூடல்

Published On 2026-02-14 15:32 IST   |   Update On 2026-02-14 15:32:00 IST
  • ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக 164 டெஸ்ட் மற்றும் 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
  • அனில் கும்ப்ளே 132 டெஸ்ட் மற்றும் 271 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானம். இந்த மைதானத்தில் உள்ள கேலரிக்கு அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் பெயர்களை சூட்டி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் கவுரவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இருவரும் இந்தியா அணிக்காக தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ராகுல் டிராவிட் டெஸ்ட் அணியின் தடுப்புச் சுவர் என்று அழைக்கப்பட்டவர். அனில் கும்ப்ளே பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்தவர்.

ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 63 அரைசதம், 36 சதங்களுடன் 13288 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 52.31 ஆகும். 344 ஒருநாள் போட்டியில் 12 சதம், 83 அரைசதங்களுடன் 10889 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 39.16 ஆகும்.

அனில் கும்ப்ளே 132 டெஸ்ட போட்டிகளில் விளையாடி 619 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 271 ஒருநாள் போட்டிகளில் 337 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

Tags:    

Similar News