டி20 உலகக் கோப்பை: IND vs PAK போட்டியால் கொழும்புவில் பலத்த பாதுகாப்பு
- இந்தியா- பாகிஸ்தான் போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது
- மழை பெய்ய வாய்ப்ப இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
டி20 உலகக் கோப்பையில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் இன்று இரவு நடக்கிறது.
இந்த போட்டியை முதலில் பாகிஸ்தான் புறக்கணிப்பதாக தெரிவித்தது. பின்னர் ஐசிசி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியாக பாகிஸ்தான் அரசு, அந்நாட்டு கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு எதிராக விளையாட அனுமதித்தது.
கொழும்பில் இன்று மழை பெய்ய வாய்ப்ப இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆடுகளம் மூடப்பட்ட நிலையிலேயே இருக்கிறது.
இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் கொழும்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு சோதனைகள் தீவிரமாக நடைபெறும் என்பதால் ரசிகர்கள் 4 மணி நேரத்திற்கு முன்பே மைதானத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.