உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் போட்டி விதிகளில் மாற்றம் கொண்டுவர ஐசிசி முடிவு
- ஐ.சி.சி. சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டு வருகிறது.
- 2 பந்துகளால் பேட்ஸ் மேன்கள் ரன்களை குவிக்க வசதியாக உள்ளது என்ற புகாா் எழுந்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் மற்றும் ஒருநாள் போட்டி விதிகளில் மாற்றம் கொண்டு வர சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) திட்டமிட்டுள்ளது.
ஐ.சி.சி. சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டு வருகிறது. இதன் புள்ளிகள் நடை முறையில் மாறுதல் கொண்டு வரப்படுகிறது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் போது இந்த மாறுதல் நடைமுறைக்கு வரும்.
ஒவ் வொரு ஆட்டத்திலும் வெற்றியின் வித்தியாசத்தை பொறுத்து போனஸ் புள்ளிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எதிர் அணிகளின் பலத்தை பொறுத்தும், சொந்த மைதானம் இல்லாமல் வெளி மைதானங்களில் வெல்வதை பொறுத்தும் புள்ளிகள் வழங்கப்படுகிறது.
ஒருநாள் போட்டியில் தற்போது ஒரு இன்னிங்சில் 2 பந்துகள் பயன்படுத்தும் முறை ரத்து செய்யப்படும். முன்னாள் கேப்டன் கங்குலி தலைமையிலான குழு இது தொடா்பாக பரிந்துரைத்து உள்ளது.
2 பந்துகளால் பேட்ஸ் மேன்கள் ரன்களை குவிக்க வசதியாக உள்ளது என்ற புகாா் எழுந்துள்ளது. இதனால் ஒரே ஒரு பந்தை பயன்படுத்த முடிவு செய் யப்பட உள்ளது. டெஸ்ட் ஆட்டங்களில் டைமா் கடிகாரத்தை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
ஜிம்பாப்வேயில் இந்த வார இறுதியில் நடைபெறும் ஐ.சி.சி. கூட்டத்தின் போது இதுகுறித்து முடிவு எடுக்கப் படும் என்று கூறப்படுகிறது.