WTC இறுதிப்போட்டிக்கு செல்ல இதுதான் ஒரே வழி! - பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்த சுப்மன் கில்
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்திய அணி 9 போட்டிகள் விளையாடி உள்ளது
- WTC புள்ளிப்பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பந்தயத்தில் இந்தியா நீடிக்க வேண்டும் என்றால் அடுத்து வரும் 9 போட்டிகளில் குறைந்த பட்சம் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்திய அணி 9 போட்டிகள் விளையாடி உள்ளது. இதில் ஒரு போட்டி டிரா, 4 வெற்றி, 4 தோல்வியடைந்துள்ளது. இதன் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.
இன்னும் இந்திய அணிக்கு 9 போட்டிகள் உள்ளது. இதில் குறைந்த பட்சம் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
இந்திய அணி இந்த 9 போட்டிகளில் ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.
இலங்கையில் 2 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. அதனை தொடர்ந்து நியூசிலாந்திலும் 2 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. கடைசியாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிராக முடிந்த அளவுக்கு இந்தியா போராடி வெற்றி பெற்றாலும் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெறுமா என்பது சந்தேகமாக உள்ளது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு புதிய திட்டம் ஒன்றை டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் வகுத்துள்ளார். ஒரு டெஸ்ட் தொடரில் களமிறங்குவதற்கு முன்பு இந்திய அணி வீரர்களுக்கு சிறந்த பயிற்சி தேவை. ஆகவே ஒவ்வொரு டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாக வீரர்களுக்கு 15 நாள் முகாம் நடத்தவேண்டும் என்று பிசிசிஐயிடம் கில் கோரிக்கை வைத்துள்ளார்.