கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று: ஜிம்பாப்வே அணியை நசுக்கியது வெஸ்ட் இண்டீஸ்..!

Published On 2026-02-23 22:47 IST   |   Update On 2026-02-23 22:47:00 IST
  • ஜிம்பாப்வே அணி 147 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
  • பிராட் எவன்ஸ் 21 பந்தில் 43 ரன்கள் சேர்த்தார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் குரூப் 1-ல் இடம் பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ்- ஜிம்பாப்வே அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்தது. ஹெட்மையர் 85 ரன்களும், ரோவ்மேன் பொவெல் 59 ரன்களும் விளாசினார்.

பின்னர் 255 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 147 ரன்களில் சுருண்டது. ஜிம்பாப்வே கடைசி விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிராட் எவன்ஸ் 21 பந்தில் 43 ரன்கள் விளாசினார். தியோன் மையர்ஸ் 28 ரன்கள் சேர்த்தார். சிகந்தர் ரசா 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் குடகேஷ் மொய்தி 4 விக்கெட்டுகளம், அகீல் ஹொசைன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Tags:    

Similar News