வாண வேடிக்கை காட்டிய வெஸ்ட் இண்டீஸ்: ஜிம்பாப்வே அணிக்கு 255 ரன்கள் இலக்கு
- வெஸ்ட் இண்டீஸ் அணியினர் மொத்தமாக 19 சிக்சர்களை பறக்க விட்டனர்.
- ஹெட்மயர் 34 பந்தில் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் ஜிம்பாப்வே- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிங் மற்றும் சாய் ஹோப் களமிறங்கினர். இதில் கிங் 9 ரன்னிலும் ஹோப் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த சிம்ரன் ஹெட்மயர் மற்றும் பவல் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதிரடியாக விளையாடிய ஹெட்மயர் 19 பந்தில் அரை சதம் விளாசி அசத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 34 பந்தில் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரி 7 சிக்சர்கள் அடங்கும். அதனை தொடர்ந்து பவல் 35 பந்தில் 59 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இறுதியில் ரதர்போர்ட் மற்றும் ஷெப்பர்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷெப்பர்ட் 10 பந்தில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி வரை ஆடிய ரதர்போர்ட் 31 ரன்கள் எடுத்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 254 ரன்கள் குவித்தது.