ரோகித், விராட் எதிர்காலம் குறித்து மவுனம் கலைத்த கம்பீர்
- டி20 போட்டியில் விராட் கோலி, ரோகித் ஆகியோர் ஓய்வு பெற்றுள்ளனர்.
- தற்போது இருவரும் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகின்றனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இதன்மூலம் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி வெல்லும் முதல் சாம்பியன் பட்டமாகவும் இது அமைந்தது.
கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் ரோகித், விராட், ஜடேஜா ஆகியோர் டி20 போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தனர். தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். ஒருநாள் தொடரில் விராட், ரோகித் சர்மாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு உள்ளது. டெஸ்ட் தொடரில் மட்டும் இருவரும் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மவுனம் கலைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தேர்வுக்குழுவே வீரர்களை தேர்வு செய்கிறது. அவர்கள் சிறப்பாகச் செயல்படும் வரை, அவர்கள் அணியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். எந்த பயிற்சியாளரோ, தேர்வாளரோ அல்லது பிசிசிஐ-யோ உங்களை விளையாடுவதை நிறுத்தச் சொல்ல முடியாது. நன்றாக விளையாடுவது மட்டுமே ஒரு வீரரின் தேர்வை உறுதி செய்கிறது.
என கம்பீர் கூறினார்.