கிரிக்கெட் (Cricket)

இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் டி20 அணி அறிவிப்பு: முன்னணி வீரர்களுக்கு இடமில்லை

Published On 2025-12-28 19:03 IST   |   Update On 2025-12-28 19:03:00 IST
  • பிக் பாஷ் தொடரில் விளையாடும்போது காயம் அடைந்த ஷாஹீன் அப்ரிடி சேர்க்கப்படவில்லை.
  • 23 வயதான விக்கெட் கீப்பர் புதுமுகமாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணி ஜனவரி மாதம் தொடக்கத்தில் இலங்கை சென்று மூன்று போட்டிகள் கொண்டி டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கிய பேட்ஸ்மேன்களான பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பிக் பாஷ் தொடரில் விளையாடும்போது காயம் அடைந்த ஷாஹீன் அப்ரிடியும் அணியில் சேர்க்கப்படவில்லை.

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து காயம் காரணமாக விளையாடாமல் இருந்து ஷதாப் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 23 வயதான புதுமுக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கவாஜா நஃபே அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரிவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடைபெற இருக்கிறது. இதனால் உலகக்கோப்பைக்கு தயாராக பாகிஸ்தானுக்கு இந்த தொடர் நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது.

இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் அணி:-

சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்துல் சமாத், அப்ரார் அகமது, பஹீம் அஷ்ரப், பஹர் சமான், கவாஜா நஃபே (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, சஹிப்சதா பர்ஹான் (விக்கெட் கீப்பர்), சைம் ஆயுப், சதாப் கான், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), உஸ்மான் தரிக்.

Tags:    

Similar News