கிரிக்கெட் (Cricket)
null

இங்கிலாந்து அணிக்கு கெட்ட செய்தி... மேலும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் விலகல்

Published On 2025-12-29 12:12 IST   |   Update On 2025-12-29 12:12:00 IST
  • 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
  • இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 4-ந் தேதி தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றியது.

அதனை தொடர்ந்து 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அசத்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 4-ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் காயம் காரணமாக விலகி உள்ளார். ஏற்கனவே காயம் காரணமாக ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் ஆகியோர் காயம் காரணமாக ஆஷஸ் தொடரில் இருந்து விலகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News