கிரிக்கெட் (Cricket)

அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்த நியூசிலாந்து ஆல் ரவுண்டர்

Published On 2025-12-29 12:00 IST   |   Update On 2025-12-29 12:00:00 IST
  • நியூசிலாந்து அணிக்காக 2011 முதல் 2023 வரை விளையாடியுள்ளார்.
  • நீண்டகால விலா எலும்பு காயம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் டக் பிரேஸ்வெல். இவர் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான இவர், நீண்டகால விலா எலும்பு காயம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளார்.

இவர் நியூசிலாந்து அணிக்காக 2011 முதல் 2023 வரை விளையாடியுள்ளார். 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 74 விக்கெட்டுகளும், 568 ரன்களும் எடுத்துள்ளார்.

21 போட்டிகளில் ஒருநாள் போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளும் 20 போட்டிகளில் 20 விக்கெட்டுகள் என மொத்தம் 120 விக்கெட்டுகளும், 915 ரன்களும் எடுத்துள்ளார். 

இவர் 2011-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 60 ரன்களை விட்டுக் கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரின் பங்களிப்பால் 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் நியூசிலாந்து அணி இன்னும் வரை வெற்றி பெற்றதில்லை.

ஓய்வு அறிவித்த டக் பிரேஸ்வெல்லுக்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News