கிரிக்கெட் (Cricket)

எஸ்.ஏ. லீக் கிரிக்கெட்டில் குறைந்த ஸ்கோர்: மோசமான சாதனை படைத்த பார்ல் ராயல்ஸ் அணி

Published On 2025-12-29 11:20 IST   |   Update On 2025-12-29 11:20:00 IST
  • 4-வது எஸ்.ஏ. லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.
  • இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோதுகின்றன.

பார்ல்:

4-வது எஸ்.ஏ. லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோதுகின்றன. லீக் முடிவில் டாப்4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் பார்ல் நகரில் நடந்த 3-வது லீக்கில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, பார்ல் ராயல்சை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுக்கு 186 ரன்கள் சேர்த்தது. ஜோர்டான் ஹெர்மேன் 62 ரன்கள் (28 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார்.

அடுத்து களம் இறங்கிய டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணி, எதிரணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 11.5 ஓவர்களில் 49 ரன்னில் சுருண்டது. எஸ்.ஏ. கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் மோசமான ஸ்கோர் இது தான். இதற்கு முன்பு கடந்த ஆண்டில் பிரிட்டோாரியா கேப்பிட்டல்ஸ் அணி, சன்ரைசர்சுக்கு எதிராக 52 ரன்னில் அடங்கியதே குறைந்த ஸ்கோராக இருந்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் அன்ரிச் நோர்டியா 4 விக்கெட்டும், ஆடம் மில்னே, தாரிந்து ரத்னாயகே தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

Tags:    

Similar News