கிரிக்கெட் (Cricket)
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?
- பாகிஸ்தானுக்கு எதிராக முதல் ஓவரிலேயே 2 விக்கெட் வீழ்த்தினார்.
- நெதர்லாந்தை போட்டி இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை.
டி20 உலகக் கோப்பையில் இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில் நாளை நெதர்லாந்தை குரூப் சுற்றின் கடைசி லீக் போட்டியில் எதிர்கொள்கிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படுமா? என்பது குறித்து பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் கூறுகையில் "பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. நாங்கள் பின்னர் இது குறித்து முடிவு செய்வோம்" என்றார்.
பும்ராவின் பனிச்சுமை காரணமாக இந்திய அணி அவரை அனைத்தும் போட்டிகளிலும் விளையாட வைப்பதில்லை. தேவையான போட்டிகளில் மட்டும் விளையாட வைக்கிறது. நாளைய போட்டி இந்தியாவக்கு முக்கியமான போட்டி அல்ல.
பாகிஸ்தானுக்கு ஏதிராக தனது முதல் ஓவரிலேயே சயீம் ஆயுப், சல்மான் அலி ஆகா ஆகியோரை அவுட்டாக்கினார். அதன்பிறகு பாகிஸ்தான் அணி சரிவை எதிர்கொண்டது.