கிரிக்கெட் (Cricket)

படிப்பை விட கிரிக்கெட் முக்கியமா?... 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாத வைபவ் சூர்யவன்ஷி

Published On 2026-02-17 20:01 IST   |   Update On 2026-02-17 20:01:00 IST
  • வைபவ் சூர்யவன்ஷி 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரி விளாசி 175 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்
  • பள்ளி மாணவனாக இருக்கும்போதே கிரிக்கெட்டில் ஜொலித்து வருகிறார் வைபவ் சூர்யவன்ஷி

ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி.

19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரி விளாசி 175 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பெறவைத்தார்.

பள்ளி மாணவனாக இருக்கும்போதே கிரிக்கெட்டில் ஜொலித்து வரும் வைபவ் சூர்யவன்ஷி இன்று தொடங்கிய சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவில்லை என்று அவரின் பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேட்டி அளித்த அவர், "கிரிக்கெட் பயிற்சி காரணமாக வைபவ் சூர்யவன்ஷி தேர்வை எழுதாமல் இருக்கலாம். அடுத்த பாடத்தேர்வை அவர் எழுதுவார் என நம்புவதாக தெரிவித்தார்.

ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கவுள்ளதால் வைபவ் சூர்யவன்ஷி அதற்கான பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதனால் அவர் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாமாட்டார் என்று கூறப்படுகிறது. 

Tags:    

Similar News