மழையால் ஜிம்பாப்வே- அயர்லாந்து போட்டி ரத்து: குரூப் 8 சுற்று வாய்ப்பை இழந்தது ஆஸ்திரேலியா
- ஜிம்பாப்வே 2 வெற்றி, ஒரு போட்டி ரத்து மூலம் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
- ஆஸ்திரேலியா லீக் சுற்றோடு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறுகிறது.
டி20 உலகக் கோப்பையில் "பி" பிரிவில் இலங்கை, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன் அணிகள் இடம் பிடித்துள்ளன. இலங்கை 3 போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றை உறுதி செய்துள்ளது.
ஜிம்பாப்வே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஜிம்பாப்வேயிடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்ததால் 3 போட்டிகளில் 2-ல் தோல்வியை சந்தித்துள்ளது. இன்னும் ஓமனுடன் விளையாட வேண்டியுள்ளது.
இந்த நிலையில் இன்று மதியம் ஜிம்பாப்வே- அயர்லாந்து இடையிலான போட்டி இலங்கையில் உள்ள பல்லேகலேயில் நடைபெற இருந்தது. இந்த போட்டி மழையினால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இந்த போட்டியில் ஜிம்பாப்வே தோல்வியடைந்தால்தான் ஆஸ்திரேலியாவுக்கு சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற சிறிய அளவில் வாய்ப்பு. அடுத்த போட்டியில் இலங்கையிடம் ஜிம்பாப்வே தோல்வியடைய வேண்டும்.
ஆனால் மழையால் டாஸ் கூட சுண்டப்படாமல் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஜிம்பாப்வே 1 புள்ளி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை தகர்ந்தது.