DEFINITELY NOT... தோனி ஓய்வு குறித்து சிஎஸ்கே சூசக பதிவு
- தோனி ஓய்வு குறித்து கடந்த 6 -7 ஆண்டுகளாக நிறைய வதந்திகள் வந்த வண்ணம் உள்ளது.
- போன சீசனில் அதிகமாக களத்தில் இருந்து அவரால் விளையாட முடியாது என பயிற்சியாளர் பிளெமிங் கூறியிருந்தார்.
ஐபிஎல் தொடர் 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிக பட்சமாக மும்பை, சென்னை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.
ஐபிஎல் தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை பேசப்பட்டு வரும் பெயராக எம்எஸ் தோனி இருக்கிறது. இந்திய அணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அவர் சிஎஸ்கே மூலமும் பல ரசிகர்களை அவர் கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் அவரது ஓய்வு குறித்து கடந்த 6 -7 ஆண்டுகளாக நிறைய வதந்திகள் வந்த வண்ணம் இருந்தது. இந்த வதந்தியால் அவரது ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது தான் மிச்சம். இருந்தாலும் அவரது பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கம் இல்லாததால் பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக போன ஆண்டு அதிக என்றே சொல்லலாம்.
போன சீசனில் அதிகமாக களத்தில் இருந்து அவரால் விளையாட முடியாது என பயிற்சியாளர் பிளெமிங் கூறியிருந்ததால் அடுத்த ஆண்டு தோனி விளையாடுவாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் இடையே எழுந்து வருகிறது. ஏனென்றால் தற்போது அவருக்கு 44 வயதாகிறது.
இந்நிலையில் அவர் அடுத்த ஆண்டு விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு புகைப்படத்தை பதிவிட்டு சூசகமாக தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
2020-ம் ஆண்டு IPL-ன் கடைசி லீக் போட்டியின்போது "இதுதான் நீங்க மஞ்சள் ஜெர்சியில் விளையாடும் கடைசி போட்டியா?" என்ற கேள்விக்கு 'கண்டிப்பாக இல்லை' என பதிலளித்திருந்தார் சிஎஸ்கே கேப்டன் தோனி. அந்த புகைப்படத்தை வெளியிட்ட சிஎஸ்கே marks 5 years of #DefinitelyNot என பதிவிட்டிருந்தது.
இந்த பதிவை வைத்து அடுத்த ஆண்டும் தோனி விளையாடுவார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.